வவுனியாவில் இளம்பெண்ணிற்கு தொலைபேசியில் சில்மிசம் அரச உத்தியோகத்தர்!

114

இளம் குடும்பப்பெண் ஒருவருக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை கொடுத்த மன்மதராசா ஒருவர் வவுனியாவில் சிக்கிக் கொண்டுள்ளார்.அவர் நேற்று கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று (20) இந்த சம்பவம் நடந்தது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவருக்கு தொலைபேசி குறுஞ்செய்தி வழியாக தினமும் ஆபாசம் வழியும் செய்திகளை ஒருவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அந்த இளம்பெண்ணும், கணவனும் தீவிர தேடுதல் நடத்தி, தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன், அரச உத்தியோகத்தர் என்பதை கண்டறிந்தனர். அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு அவர்கள் சென்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். அங்கு இரு தரப்பிற்குமிடையில் பெரும் முறுகல் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டு, கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.