தூக்கு காவடியை வழிமறித்து அனுப்பிய பொலிஸார்

398

முள்ளியவளையில் நேர்த்திக்கடன் செய்வதற்காக தூக்கு காவடி எடுத்தவரை வழிமறித்து திருப்பி அனுப்பிய பொலிஸார்..

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. காட்டு விநாயகர் ஆலய பொங்கலை முன்னிட்டு ஒருவர் நேர்த்தி கடன் செய்வதற்காக வந்த தூக்கு காவடியை இடைநிறுத்தி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் பொலிசாரினால்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் குவிக்கப்பட்டு நேற்று பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.முள்ளியவளை மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக தூக்கு காவடி எடுத்து வந்துள்ளார்கள்.

இவர்களை வழிமறித்த பொலிஸார் தூக்கு காவடியில் தொங்கியவரை இறக்கி உள்ளனர்.

முதுகில் குத்தப்பட்டு இருந்த செடில்களை கழற்றிவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்