முல்லைத்தீவில் கிராம சேவகர் மீது கோர தாக்குதல்!

68

வட தமிழீழம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு கிராமசேவகர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மந்துவில் கிராம அலுவலகர் இன்று இனம் தெரியாத நபர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கிராம சேவகர் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளது டன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.