முல்லைத்தீவில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு !

161

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தின் போது காமடைந்த நிலையில் யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துளார்.

முள்ளியவளை சேர்ந்த 23 வயதுடைய தனுசியன் என்ற இளைஞன் கடந்த வாரம் கோடாலிக்கல்-நெடுங்கேணி வீதியில் இரு சக்கர வாகனத்துடன் சென்ற இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 23.05.2020 அன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.