மீண்டும் சேரனின் ஆட்டோகிராப்…!

35

கொரோனா ஊரடங்கு கரரணமாக தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சினிமா ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வழி ஓடிடி தான். எனவே அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஓடிடி தளங்கள் புதுப்படங்கள் மட்டுமின்றி பழைய படங்களையும் தங்கள் தளங்களில் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் ஆட்டோகிராப் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் செயலியில் ஆட்டோகிராப் படத்தை பார்த்து பலர் ரசித்து வருகின்றனர்.

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆட்டோகிராப் படத்தில் பரத்வாஜ் இசையமைத்த இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். குறிப்பாக ஞாபகம் வருதே, ஒவ்வொரு பூக்களுமே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ரீங்காரமிட்டன. இப்படம் காதலர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். இந்த படத்தை போலவே தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்கள் வெளிவந்தன. சில படங்கள் சூப்பர் ஹிட்டாகின.