இன்றைய தினம் எந்தவொரு கொரோனாத் தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை; அனில் ஜாசிங்க

53

இன்றைய தினம் (17) நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மொத்தமாக 538 பேர் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் இதுவரையில் மொத்தமாக 960 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தற்போது 413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் (16) மாத்திரம் 1081 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.