தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜாவின் நினைவுதினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது….!

29

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்த கிறிஸ்டி குகராஜா (குகன்) நினைவுதினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் நீண்டகாலமாக டெலோ அமைப்பின் பொறுப்பாளராக இருந்த சமயம் 1999ஆம் ஆண்டு கொழும்பில் இனந்தெரியாதோரால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 21ஆவது வருட நினைவு தினம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக நடைபெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தலைவர் து. நடராஜசிங்கம் (ரவி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குறூஸ், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.