வவுனியாவில் கட்டாகாலி மாடுகள் பிடிக்கப்படும் ;வவுனியா நகரசபை அறிவிப்பு…!!

12

வவுனியா நகரில் உலாவிதிரியும் கட்டாகாலி மாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து பிடிக்கப்படும் என வவுனியா நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் கட்டாகாலி மாடுகளின் தொல்லையால் போக்குவரத்து நெருக்கடி நிலை உருவாவதுடன் விபத்துக்களும் ஏற்பட்டுவருகின்றது. அதனை கருத்தில் கொண்டு கட்டாகாலிகளாக வீதிகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் செயற்பாடுகள் நகரசபையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குசட்டம் காரணமாக குறித்த செயற்பாடு இடை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நகரசபையால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நகரஎல்லைக்குடபட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக குறித்த அறிவித்தல் இன்றயதினம் விடுக்கப்பட்டதுடன், பிடிக்கப்படும் மாடுகள் தண்டப்பணம் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.