Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்3 ஆண்டுகளாக வயிற்று வலியில் அவதி பட்டு வந்த நபரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கால்...

3 ஆண்டுகளாக வயிற்று வலியில் அவதி பட்டு வந்த நபரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கால் கிலோ கற்கள் !

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வந்த நபர் ஒருவரின் வயிற்றுக்குள் இருந்து 5 மி.மீ முதல் 50 மி.மீ வரையிலான ஆயிரம் கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த நபருக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு என நோய்வாய்ப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து உடல் நல பாதிப்பு ஏற்படுவதையடுத்து அவரது வயிற்றில் ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதில் அந்த நபரின் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நீர்க்குழாய் பகுதிகளில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வேர்க்கடலை அளவு முதல் லெமன் அளவு வரை வெவ்வேறு அளவுகளில் அவரது வயிற்றுப்பகுதியில் இருந்த கற்கள்தான் அவரது உடல் நல பாதிப்புக்கு காரணம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனால் அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஐதரபாத் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள மெடிகவர் மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டார். அதிக அளவு கற்கள் இருந்ததால் பித்த நாளத்தில் வீக்கமும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலமாக கற்களை அகற்ற எடுக்க முடியுமா என மருத்துவர்கள் முயற்சித்தனர்.

இருமுறையும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கற்கள் அகற்றப்பட்டன. மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்கள் இருந்தன. இவற்றின் எடை கால் கிலோவிற்கும் மேல் இருந்தது. அகற்றப்பட்ட கற்கள் 5 மி.மீட்டர் முதல் 50 மில்லி மீட்டர் அளவு கொண்டதாக இருந்துள்ளது. ஐந்து நாட்கள் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஐந்து நாட்கள் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து நோயாளி டிஸ்சார்ஜ் செய்யபப்ட்டார்.

தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ள அந்த கொல்கத்தா நபர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருவதாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அந்த நபர் தனது இயல்பான வாழ்க்கையை தொடங்கிவிட்டாராம். அந்த நபரின் குடும்பத்தினரும் மருத்துவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். கல்லீரல் மற்றும் பித்தப்பைகளில் இவ்வளவு கற்கள் உருவானது எப்படி..இதற்கான மருத்துவ காரணங்கள் என்ன என்பது குறித்து எந்த தகவலும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments