வவுனியாவில் 35 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

23

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

இன்றைய தினம் பிற்பகல் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஈச்சங்குளம் காட்டுப்பகுதியை முற்றுகையிட்ட பொலிசார் 35 லீற்றர் கசிப்பினை கைப்பற்றியுள்ளதுடன், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் கோடா மற்றும் பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர். 

அதனை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்  அடிப்படையில் வவுனியா சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

 மேலும், கைது செய்யபட்டவர் நாளைய தினம் நீதி மன்றில் ஆயர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.