யாழில் துகில் தொங்கிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!

167

யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சந்தியா (வயது- 14) எனும் சிறுமியே வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எமது விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

சிறுமியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.