Friday, March 29, 2024
Homeஇந்திய செய்திகள்2023 பட்ஜெட்….தங்கவிலையில் ஏற்படுத்திய மாற்றம் …!!!

2023 பட்ஜெட்….தங்கவிலையில் ஏற்படுத்திய மாற்றம் …!!!

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்கிறார். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. இதனால், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடு, வரிச் சலுகைகள், கிராமப்புறப் பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலாத் துறை என தொழில் வணிகத் துறைக்கு பல எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தியாவிலேயே தங்கம் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தங்க நகை வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது. தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் பட்சத்தில் சவரனுக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments