Thursday, April 18, 2024
Homeவிளையாட்டு20/20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்று : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா...

20/20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்று : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி !

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்றில் இந்தியா 04 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

160 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்தியாவின் ஆரம்ப விக்கெட்கள் விரைவாக வீழ்த்தப்பட்டன.

31 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்கள் வீழ்த்தப்பட இந்தியா பின்னடைவிற்குள்ளானது.

கே.எல். ராகுல் மற்றும் அணித்தலைவர் ரோஹித் சர்மா தலா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

சூர்யகுமார் யாதவ் 15 ஓட்டங்களுடன் வௌியேறினார்.

அதனையடுத்து இணைந்த விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி விக்கெட் இழப்பைத் தவிர்த்தனர்.

பின்னர் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த இருவரும் இணைப்பாட்டமாக 78 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் பெறப்பட வேண்டிய நிலையில், முதல் பந்திலேயே ஹார்டிக் பாண்டியா பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் 37 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த போதிலும், இறுதிப்பந்தை எதிர்கொண்ட அஷ்வின் ஓர் ஓட்டத்தைப் பெற்று போட்டியை நிறைவு செய்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments