டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் !

415

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மாற்று வீதம் தொடர்பான தகவல்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 369.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிரான ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு நிலையற்றதாகவே உள்ளது.

இதன்படி யூரோ ஒன்றின் விற்பனை விலை 370.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 355.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை விலை ரூ.427.02 ஆகவும், கொள்முதல் விலை ரூ.410.79 ஆகவும் பதிவாகியுள்ளது.