ஜனாதிபதி ரணிலுக்கு உலகமே அஞ்ச வேண்டும்! – வஜிர அபேவர்தன !

60

சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் எப்பொழுதும் எமது நாட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக உலகிற்கு எதிராக போராடக்கூடிய தலைவர் ஜனாதிபதியாகியுள்ளதாகவும் அவருக்கு உலகமே அஞ்ச வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டு மக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்தால் 2048 ஆம் ஆண்டளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போன்று இலங்கையை உலகின் சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.