வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு : மூவர் படுகாயம்!

349

வவுனியா பொன்னவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்தினுள் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள் வெட்டுச் சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் தடியடியில் 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (08) மாலை பொன்னவரசன்குளம் பிள்ளையார் ஆலய திருவிழாவின் போது ஆலயத்தில் நின்றிருந்த சிலருக்கும் ஆலயப் பகுதிக்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (09) ஆலயத்தில் கொடியிறக்க பூசைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த குழுவினருக்கும் ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு வாள்வெட்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.