புதிய அமைச்சரவையில் இவர்களுக்கே முன்னுரிமை! பிரதமர் தெரிவிப்பு !

110

இலங்கையில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் குறித்து நடைமுறை புரிதல் இல்லாத ஆண்களுக்கு இந்த அமைச்சகத்தை ஒதுக்குவது அர்த்தமற்றது என சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களின் பிரதிநிதித்துவத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.