கைது நடவடிக்கைக்கு இடையூராக இருந்த தாய் மற்றும் மகனுக்கு விளக்கமறியல் !

260

திருகோணமலை – மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய தாயும் 26 வயதுடைய மகனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மொரவெவ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை சோதனையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இளைஞனின் தாயார், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கையை கடித்து காயப்படுத்தியதாகவும், கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.