இலங்கைக்கு கிடைக்கும் தொடர் உதவிகள்! டொலரின் பெறுமதி குறையலாம்!

82

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையை 300 ரூபாவாக குறைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நிதியினால் டொலரின் பெறுமதி குறைக்கப்படலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

பணம் அனுப்புதல் மற்றும் நிதி வரவு அதிகரிப்பு ஆகியவை ஒரு அமெரிக்க டாலர் வாங்கும் விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போது அமெரிக்க டாலர் ஒன்றின் மதிப்பு ரூ. 367. 30 கூடு என்பது குறிப்பிடத்தக்கது.