இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் !

54

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் 115 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மேலும், 43 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

திருத்தப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.