ஜீ.எல்.பீரிஸ் இன் பதவி பறிப்பு; மகிந்தவுக்கு கிடைத்த வாய்ப்பு !

144

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸை அப்பதவியில் இருந்து நீக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜி.எல்.பீரிஸை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவர் பதவிக்கு தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று விதிகளை மீறியதன் காரணமாக ஜி.எல்.பீரிஸை அப்பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.