ஹெரோயினுடன் ‘குடு பட்டி’ உட்பட இருவர் கைது!

192

‘ஹரக் கட்டா’ எனப்படும் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நடுன் சிந்தக விக்ரமரத்னவின் போதைப்பொருள் கும்பலின் முக்கிய உறுப்பினரான ‘குடு பட்டி’ அல்லது ‘குடு ரெஜினா’ உட்பட இரு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.

51 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த போதே ராஜகிரிய கோட்டே வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 1.5 மில்லியன்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் ராஜகிரிய மற்றும் தங்கலை பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.