கால் இழந்த தந்தையின் உழைப்பில் 3ஏ சித்தி பெற்ற மாணவி; குறிக்கோள் என்ன தெரியுமா!!

850

இலங்கையில் நடந்த கொடூரப் போரில் ஒரு காலை இழந்த தந்தையால் கைவிடப்பட்ட கிராமத்தில் வறுமைக்கு மத்தியில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மன்னார் மூன்றாம் பிட்டியில் மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த நிலாமதி என்ற மாணவி குடும்ப வறுமை காரணமாக மன்னார்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று மன்னார்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்துள்ளார்.

எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்தில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில், தனது தந்தை போரில் ஒரு காலை இழந்த நிலையிலும் கல்வியைக் கைவிடாத நிலாமதி 3A சித்திகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், எனது தந்தையின் கனவை நனவாக்கி, வழக்கறிஞராகி எனது கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் என நிலாமதி தெரிவித்துள்ளார்.