பாம்புகளை பிடிக்கும் நபர் பாம்பு தீண்டி மரணம்!

433

பாம்பு பிடிப்பவர் காட்டிற்குள் தூக்கிச் சென்று தோளில் போட்டுக் கொண்ட நாகப்பாம்பு கடித்து உயிரிழந்தார் .

இந்த சம்பவம் நேற்று அம்பலாங்கொட அக்குரல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சுதத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த நாகப்பாம்பை இந்த நபர் பிடித்துள்ளார். பிடிபட்ட பாம்பை தோளில் போட்டு இருபுறமும் இழுத்த போது பாம்பு தீண்டியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பாம்பு கடித்த நபர் முதலில் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

பாம்பு கடித்து உயிரிழந்த இவர் இதற்கு முன்னர் பல பாம்புகளை பிடித்து காட்டில் விட்டு சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.