எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம்!

177

அடையாளம் காணப்பட்ட ஒரு துறைக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

QR முறைமை தொடர்பில் இன்று (23) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்கான இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த 03 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது, ​​வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் எரிபொருள் பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், எரிபொருள் பாவனை குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, போக்குவரத்து அல்லாத எரிபொருள் தேவைகள் மற்றும் சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரம் செப்டெம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், QR அமைப்பின் மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.