மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

229

இன்று (22) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் மின்வெட்டு நீடிக்கப்பட்டிருந்தது.

இதனால் 3 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது.

இதேவேளை, நாட்டின் மின்சார விநியோகத்திற்கு உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.