நாட்டில் வேலை செய்யமுடியாதவர்கள் வீட்டிற்கு செல்லலாம் ஊதியம் வழங்கமாட்டோம் : ஜனாதிபதி!

148

நாட்டு மக்கள் இன்று பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், வரலாற்றில் இவ்வாறான அழுத்தங்கள் இருந்ததில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும். கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி குறையும். வேகமாக நடக்கிறது. அதன் விளைவுகளை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

மேலும் கடினமாக உழைக்க முடியாத அரசு ஊழியர்கள் வீட்டிற்கு செல்லலாம். எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று கடுமையாக அறிவுறுத்தினார்.