திடீரென கோட்டாபயவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி : வெளியான காரணம்!

121

நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த பிரச்சினை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்து நாட்டை விட்டு வெளியேறி தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதியை நாடு திரும்புவதற்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததாக அறியமுடிகிறது.

ஊகங்கள் இருந்தாலும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி அவர் நாடு திரும்பமாட்டார் என்பதும் அவர் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.