பேருந்துகளில் கட்டணம் செலுத்துவதற்கு புதிய முறை அறிமுகம்!

72

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பேருந்துகளுக்காக கொட்டாவ – மகும்புர மல்டிமோடல் சென்டரில் முதன்முதலில் முன்பணம் செலுத்தப்பட்ட பேருந்து அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்குத் தேவையான தொகையை முன்கூட்டியே செலுத்தி டெபிட் கார்டைப் போலவே பேருந்து அட்டையையும் பயன்படுத்த முடியும்.

பேருந்து அட்டை தற்போது மக்கள் வங்கியில் பாதுகாப்பான கட்டண நுழைவாயிலின் கீழ் மட்டுமே கிடைக்கிறது.

நாட்டில் பொதுப் போக்குவரத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதிர்வரும் காலங்களில் பஸ் அட்டை முறையை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

புகையிரத சேவைகளுக்கும் இதேபோன்ற அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.