மலை ஏறும்போது தவறி விழுந்து பலியான பல்கலைக்கழக மாணவி!

444

மாவனல்லையில் இன்று (ஆகஸ்ட் 21) சரடியல் பாறை என அழைக்கப்படும் உத்துவான்கந்தவில் இருந்து இளம் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மேலதிக விவசாய ஆலோசகராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் 58 பேர் கொண்ட குழுவுடன் உதுவான்கந்தவில் நடைபயணம் மேற்கொண்ட 27 வயதுடைய யுவதி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.