யாழில் காணமல் போன முதியவர் சடலமாக மீட்பு : வெளியான காரணம்!

60

யாழில் காணாமல் போன முதியலர் சடலமாக மீட்க்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன முதியவர் குறித்த பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போன நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரண நடத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து சடலம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சென்று பார்த்த போது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அவரின் உறவினர்கள் அச்சடலம் மயில்வாகனம் குருமூர்த்தி தான் என உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.