முல்லைத்தீவில் 17 வயது மாணவியை வெள்ளை காரில் கடத்திய சந்தேக நபர்கள்!

622

முல்லைத்தீவில் 17 வயது மாணவியை காரில் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீதியில் வந்த மாணவி ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தலை மேற்கொண்டவர்கள் உபயோகித்த கார் இலக்கம் NP CAH 6552 என்ற வெள்ளை கார் என அடையாளம் சொல்லியுள்ளனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து கடத்தல் தொடர்பில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவி காணாமல் போன நிலையில் பொலிஸார் கைது செய்த இரு இளைஞர்களுடன் விசாரணையை மேற்கொண்டு வருவதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக மாணவியின் தொடர்பு இல்லாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றனர்.