சற்றுமுன் திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து : 3 பேர் பலி!

915

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 03 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று காலை 9.30 மணியளவில் திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் .64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக 18 பேர் உழவு இயந்திரத்தில் சென்றுள்ளனர்.

இதன்போது உழவு இயந்திரத்தின் இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டமையினால் இவ்விபத்து இடம்பெற்றது என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் முதூர் தள வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மீதமுள்ள 15 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்ந பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.