புதையலில் கிடைத்த லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கம் : திடீரென சுற்றிவழைத்த விஷேட படையினர்!

1662

புதையல் தோண்டியதில் கருப்புத் தங்கங்களை எடுத்துச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசியதகவலுக்கமைய விஷேட படையினர் சந்தேக நபரை சுற்றிவழைத்தனர்.

இதனையடுத்து நடத்திய விசாரணையில் புதையல் தோண்டி தங்கம் எடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமாரி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.

இவர் புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்டவை என கூறி கறுப்பு தங்கத்தை விற்க முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரை கைது செய்த பின் தம்வசம் வைத்திருந்த ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113.180 கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் திருக்கோவில் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.