வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை : பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள்!

222

வவுனியாவில் 15 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என பொலிஸாரிடம் மாணவரின் தாயார் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவமானது வவுனியா – செக்கட்டிபுலவு பகுதியில் கடந்த 16ம் திகதி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன சிறுவன் குறித்த பகுதியைச்சேர்ந்த இராசேந்திரன் கிருபன் என்ற 15 வயது மாணவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் 16ம் திகதி 1 மணியளவில் மகன் தூக்கத்தில் எழுந்து தண்ணீர் அறிந்தியதாகவும் காலையில் 04 மணியளவில் எழுந்து பார்த்த போது காணவில்லை எனவும் தயார் பூவரசங்குளம் பெலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவனை 15 ம் திகதி வகுப்புக்கு செல்லுமாறு தண்டித்ததனால் சிறுவன் காணாமல் போயுறுப்பான் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுவனை யாரேனும் அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 எனும் தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் குறித்த மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.