இலங்கைக்கு வந்த மலையாள சூப்பர் ஸ்டார் : வெளியான காரணம்!

432

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி அவர்கள் இலங்கையில் உள்ள கலைஞருடன் சேரந்து படம் நடிப்பதற்காக இந்தியாவில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடுகண்ணாவை – ஒரு யாத்திரை குறிப்பு எனும பெயரினையுடைய திரைப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நடிக்க வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதற்கான படப்பிடிப்புகள் கொழும்பு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில் முக்கிய கதாபாத்திரமாக இலங்கை நடிகர் ஷியா உல் ஹசன் நடித்து வருகிறார்.

மேலும் குறித்த திரைப்படம் ரஞ்ஜித் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.