கோட்டாபய மீண்டும் நாட்டிற்கு வருகை அவரை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள்!

102

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் பாரிய பிரசாரத்தை அவரின் ஆதரவாளர்கள் முகநூல் பக்கத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செயல்பாட்டிற்கு #BringBackGota என்றும் #BringHomeGota என்றும் பெயரினை வைத்துள்ளார்கள்.

இதனையடுத்து கோட்டாப ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக விசுவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கோட்டாபயவை வரவேற்க பெருமளவான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.