தமிழில் தேசிய கீதம் பாட அனுமதித்த ரணில் : ரணிலை விரட்ட திட்டம் !

345

தமிழில் தேசிய கீதம் பாட அனுமதித்ததற்காகவும் 6 சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டன் காரணமாகவும் ஜனாதிபதி ரணிலை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் ஆலோசகருமான மியன்மாருக்கான முன்னாள் தூதுவருமான நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்கூறப்பட்ட செயல்களை ஜனாதிபதி மேற்கொண்டதன காரணமாக ஆத்திரமடைந்த இந்த யோசனையை சமூக வலைத்தளங்கள் ஊடாக சிங்கள மக்களிடம் முன்வைத்துள்ளார்.

சிங்கள பௌத்த இனவாதியும், தீவிர மேற்கத்திய எதிர்ப்பாளருமான, மேற்கத்திய விஞ்ஞானம் முழுப் பொய் என்று கூறும் நளின் டி சில்வா, தற்போது அமெரிக்காவில் தனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

அவர் இந்த யோசனையை இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களிடம் முன்வைத்திருப்பதும் ஒரு வரலாற்றுக் காட்சியாகும். டி சில்வா