பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!

944

தற்போது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் மாதம் வரை எவ்வித விடுமுறையும் இன்றி நடத்த இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இவர் நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து தனியார் பாடசாலைகள் மற்றும் அரசு பாடசாலைகள் வாராந்தம் 05 நாட்கள் எவ்வித விடுமுறையுமின்றி பாடசாலைகள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

இது வரை போக்குவரத்து சிக்கலினல் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என முறைப்பாடுகள் கிடைக்கப்படவில்லை என்றும்.

அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால் அதனால் மாணவர்கள் பயனுறும் வகையில் போக்குவரத்து சபை மற்றும் அது தொடர்பான தரப்புகளிடம் கலந்துரையாடி அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வோம் என உறுதியளித்துள்ளார்.

மேலும் கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் எவ்வாறு இயங்க வேண்டும் என இதுவரையில் சுகாதார அமைச்சு அறிக்கைவிடவில்லை என்றும் அவ்வாறு அறிக்கை விட்டால் பாடசாலைகள் அவர் கூறும் அறிக்கையின் பிரகாராம் இயங்கும் என குறிப்பிட்டுள்ளார்.