இரண்டு மாதங்களின் பின் இலங்கை வரும் சுப்பர் டீசல் கப்பல்!

152

ஒரு லட்சம் மெற்றிக் டன் சுப்பர் டீசல் மற்றும் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுப்பர் டீசல் கொண்டுவரப்படுகிறது.

இதேவேளை, தேசிய எரிபொருள் அட்டை திட்டத்தின் கீழ், அரச வாகனங்களைப் பதிவு செய்வது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது.

இணையவழியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.