பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேக நபர் கைது!

163

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் கொள்ளுப்பிட்டி கோவில் மரத்தடி மற்றும் காலி முகத்துவாரத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டன.

பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் வர்த்தக குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாளிகாகந்த, லக்சேத செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 31 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (16) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.