லண்டனில் வெகு விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடிய கருணாவின் மகள்!

544

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மகள் லண்டனில் அண்மையில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

கருணா முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நிலையில், கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான கருணா, இறுதிக்கட்ட போரின் பின்னர் மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து தன்னை தீவிர அரசியலில் இணைத்துகொண்டார்.

இந்நிலையில் கருணா மகள் லண்டனில்தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதேவேளை மகளின் பிறந்த நாள் விழாவில் கருணா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் பெரும் தொகை பணத்தை கட்டார் ஊடாக வெளிநாட்டுக்கு கருணா மற்றும் அவரது முதல் மனைவி கடத்தி சென்றதாக சர்வதேச ஊடகங்கள் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.