யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

1093

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்ற மற்றுமொரு பெண் யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளார்.

அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.