75 ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் இந்தியா!

20

இந்தியா இன்று தமது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.

இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளதுடன் 21 வேட்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுத்தப்படவுள்ளது.

அதேவேளை பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புது டில்லியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றவுள்ளார். அத்துடன் புதிய திட்டங்களை நாட்டு மக்களை அறிவிப்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினத்தையொட்டி இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

மேலும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் உயர் அதிகாரிகள் என 7 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.