பிக்பாஸ் ஜோடிகள் பாவ்னி – அமீர் திருமணம்!

61

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 ப்ரமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த பாவ்னி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் அமீருடன் இவர் நெருக்கமாக பழகினார். நிகழ்ச்சியில் அமீர், பாவ்னிக்கு முத்தம் கொடுத்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவ்னிக்கு 3வது இடம் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு பிறகு பாவ்னியும் அமீரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு தங்களின் நடனத் திறமையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருவரும் திருமணம் செய்துகொள்வதுபோல காட்டப்படுகிறது. மற்ற போட்டியாளர்கள் இருவருக்கும் அட்சதை தூவுகின்றனர். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.