அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தலைக்கவச தாக்குதல்!

202

அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார்.

இருப்பினும், தாக்குதலில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

இன்று (13) காலை பாந்துராகொடவில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடுகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீரிகம பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.

சந்தேக நபர் திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் என்பதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.