தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் அதன் உரிமையாளர் பலி!

148

பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி உயிரிழந்த குறித்த நபருடையது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிடபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.