திருகோணமலை நோக்கி சென்ற ரயில் தடம் புரண்டது!

113

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று (12) இரவு 09.30 மணியளவில் திருகோணமலை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த இரவு நேர விரைவு ரயில் இன்று (13) அதிகாலை 05.25 மணியளவில் சீனன்குடா புகையிரத நிலையத்தில் தடம் புரண்டது.

இதன் காரணமாக சீனன்குடா ரயில் நிலையத்தின் நடைமேடையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அத்துடன், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன பெட்டிகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தடம் புரண்ட ரயில் தற்போது சீனன்குடாவிலிருந்து திருகோணமலைக்கு இயக்கப்பட்டுள்ளது.