பல மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நேர்ந்த நிலை!

556

காலியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் பல மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உனவடுன, மெதரம்ப சதாரா மகா தேவலாயாத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவருகிறது.

போலி அறிவியலைப் போதிப்பதற்காக உள்ளூர் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய சந்தேக நபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யச் சென்றபோது அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் காலியில் உள்ள பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் அவரை விடுவிக்க தலையிட முயற்சித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர் இந்த துஷ்பிரயோக நடவடிக்கைகளை படம்பிடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒன்பது பேரை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.