யாழில் மாநகர வீதியை சேதப்படுத்திய நபருக்கு அபராதம் விதிப்பு

262

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்தியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,குறித்த நபரிடமிருந்து 3 இலட்சத்து 87ஆயிரம் ரூபாவினை மாநகர சபை அறவிட்டுள்ளது.

யாழ்.நகர் மத்தியை அண்டிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் வீதியின் மறுபக்கம் இருந்த வெள்ள வாய்க்காலுக்குள் வீட்டு கழிவு நீரினை விடுவதற்கு ஏதுவாக வீதியை குறுக்கறுத்து கிடங்கு வெட்டி , பைப் மூலமாக கழிவு நீரை வெள்ள வாய்க்காலுக்குள் விட்டுள்ளார்.

இது தொடர்பில் அறிந்து விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சபை அதிகாரிகள் வீதியினை சேதப்படுத்தியமை, வெள்ள நீர் ஓடுவதற்காக கட்டப்பட்ட வாய்க்காலுக்குள் கழிவு நீரினை விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை குடியிருப்பாளர் மீது சுமத்தியுள்ளனர்.

குடியிருப்பாளர் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டமையை அடுத்து, வீதியை சேதப்படுத்தியமைக்கான நஷ்ட ஈடு மற்றும் தண்டப்பணமாக 3 இலட்சத்து 87ஆயிரம் ரூபாயை மாநகர சபை அறவிட்டுள்ளது.